Krouncha Bhedhanar - கிரவுஞ்ச பேதனர்/ஞான ஶக்திதர மூர்த்தி

 முருக உபாசனையின் நோக்கம் ஞானம். ஶிவகுகனிலும் இருந்து அபேதமாக விளங்கும் - பிரிவற்றிருக்கும் - அறிவே ஞான சக்தி எனப்படும்.

முருக உபாசகன் தெளிந்த அறிவை - ஞானத்தைப் பெறுவான். எப்படிப் பெறுவான் என்ற விளக்கம் வருமாறு!
அறிவை மறைப்பவை மலங்கள், இவை மூன்று!
சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் என்ற மூன்று அசுரர்களும் ஆன்மாவைப் பிடித்த ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்கள்.
இந்த மூன்று மலங்களும் எம்மில் இருப்பதால் உருவாகுவது வினைக்கூட்டமாகிய ஆகாமிய, சஞ்சித, பிரார்த்தம் எனும் மூன்று கர்மக் குவியல்களும் எம்மில் சேரும் க்ரௌஞ்ச மலை.
இந்த வினைகளை அழித்து பந்தம் அறுந்தால் கிடைப்பது ஞானம்!
இதை எப்படி முருக உபாசகன் பெறுகிறான்?
சக்தி தர மூர்த்தியின் விளக்கத்தில் பன்னிரு கரங்களும் ஶக்தியின் வெளிப்பாடு என்று பார்த்தோம்! இந்த பன்னிரு கரங்களிலும் இருக்கும் பன்னிரு ஆயுதங்கள் இந்த வினைகளை அறுக்கும் கருவிகளாம்.
ஶிவ ஶக்தி ரூபமான வேலாயுதம் ஆணவ மலத்தை அறுக்கும் ஞான ஶக்தி ரூபமாம்.
1) தோமரம்
2) துவசம்
3) குலிசம்
4) அங்குசம்
5) அம்பு
6) பங்கயம்
7) மணி
😎 மழு
9) தண்டு
10) வாள்
11) வில்
இந்த பதினொரு ஆயுதங்களும் ஏகாதச ருத்திர ஸக்திகள். பன்னிரெண்டாவது
12) வேலாயுதம் - ஶிவ ஶக்தி ஐக்கிய ரூப ஞான சக்தி
இதில் முதல் பதினொரு ஆயுதங்களும் கன்மம், மாயையை அழிக்க பிரயோகிக்கப்படும்.
ஶிவ ஶக்தி ரூபமான வேலாயுதம் ஆணவ மலத்தை அழித்து முக்தி தருவதாம்!
ஆதலால் ஞான ஶக்தியான வேலையே முருகப்பெருமானாகக் கருதுகிறோம்.
பன்னிரு கரங்களிலும் உள்ள ஆயுதங்கள் ஒவ்வொன்றும் எம்மில் உள்ள மலங்களை நீக்கி, வினைகளை அழிப்பதாக நாம் உபாசனையின் தியானத்தில் பாவிக்க வேண்டும்!
ஓம் ஞானஶக்திதர மூர்த்தயே நம:
Source - FB Shri Shakthi Sumanan

Comments

Popular posts from this blog

Subramanya Prabhavam

Sishtacharam

Skanda Sashti Kavacham