Saravanbhavar - சரவணோற்பவ மூர்த்தி
சென்ற பதிவில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட சிவதேஜஸு அக்கினி, வாயுவினால் தாங்கப்பட்டு கங்கை வழியே ஆறுதாமரைகளில் சேர்க்கப்பட்ட புலிங்க மூர்த்தி பற்றிப்பார்த்தோம்! இப்படிச் சேர்க்கப்பட்ட ஆறு தீப்பொறிகளும்- புலிங்கங்களும் சேர்ந்து உருவான முழுவடிவத்தை இங்கு காணப்போகிறோம். இந்தப் புராணக்கதையைக் கவனமாகப் படித்து மனதில் இருத்துங்கள், இதற்குள் அரிய பல யோக இரகசியங்கள் அடங்கியிருக்கிறது.
புராணக்கதை வருமாறு:
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளை கங்கையானது சுமந்து கொண்டு சரவணப்பொய்கையில் விடுத்தது. இந்த தீப்பொறிகளை பிரம்மன் ஆகாயத்திலும், விஷ்ணு பூமியிலும், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் மற்றும் ஈசானன் ஆகிய எட்டு பேரும் எண் திசைகளிலிருமிருந்து பாதுகாத்தனர்.
இந்த ஆறுபொறிகளும் அருவமும் உருவும் ஆதியும் அநாதியாய் , பலவாய் , ஒன்றாய், பிரம
மாக விளங்கிய இந்த பஞ்சசோதி ஒன்றிணைந்து ஆறு திருமுகங்களும், பன்னிரு கைகளுமாக முருகக்கடவுளாக அவதரித்தது.
இந்த மூர்த்தமே சரவணோற்பவ மூர்த்தம் எனப்பட்டது.
பன்னிரு கரங்களிலும் வேல், கேடகம், கண்டாமணி, தாமரை, கோழிக்கொடி, இடங்கம், அம்பு, வாள், வரதம், அபயம், வில் என பன்னிரு ஆயுதங்கள் இந்த மூர்த்தத்தில் உண்டு.
சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறிகளை தாங்கும் தன்மை அக்னி, வாயுவிற்கும், அதைக் கடத்தும் தன்னை கங்கைக்கும் மாத்திரமே உள்ளது என்ற சிறப்பும் இங்கு அறியப்பட்டது.
இந்தப் புராணக்கதையின் யோக இரகசியங்களை அறிந்து கொள்ள கீழ்வரும் கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டும்.
1) யோக சாதனையில் கங்கை என்பது என்ன? - சுழுமுனை நாடி என்பது முன்னர் விளங்கப்படுத்தப்பட்டது.
2) தாமரைகள் என்பது யாது? ஆறு ஆதாரங்கள்
3) சரவணப் பொய்கை என்பது யாது?
4) தீப்பொறிகளை பிரம்மன், விஷ்ணு, அஷ்ட திக்கு பாலகர்கள் காப்பது என்பது யோகத்தில் என்ன நிலை?
5) பன்னிரு கைகளும், அவற்றின் ஆயுதங்களும் யோக சாதனையில் என்ன நிலை?
6) சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறிகளை ஏன் அக்னியும், வாயும் மாத்திரமே பெற்றுக்கொண்டன. இதன் யோக விளக்கம் என்ன?
தெரிந்தவர்கள் கீழே கூறலாம், தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களின் 100 கொமெண்ட வந்தால் அதை விளக்கி பதிவு வரலாம்!
உலகில் குறைந்தது 100 பேரிற்கு பிரபஞ்ச இரகசியங்களை அறிய உண்மை ஆர்வம் ஏற்பட்டால் அது வெளிப்படும் என்பது பிரபஞ்ச விதி! Source - FB - Sri Shakthi Sumanan
Comments
Post a Comment