Shakthi Tatvam of Murugan - முருகனுக்குள் அடங்கியுள்ள ஶக்தி தத்துவம்
முருகப்பெருமானின் பன்னிரெண்டு கரங்களும் ஶக்தி தத்துவத்தின் இரகசியம் என்பதை அறிவீர்களா?
பன்னிரு கரங்களையும் தியானிப்பது பரிபூரண ஶக்தி தத்துவ விழிப்பினைத் தரும்!
பராஶக்தி ஞானமாக விரியும் போது
1) ஶிவ தத்துவம்
2) இலய தத்துவம்
3) நிட்கள தத்துவம் என்றும்
கிரியையாக விரியும் போது
4) ஶக்தி தத்துவம் என்றும்
ஞானமும் கிரியையும் இணைந்து
5) ஸதாஶிவ தத்துவம்
6) போக தத்துவம்
7) உத்தி யுத்த தத்துவம்
இச்சையாக விரியும் போது
9) ஈசுவர தத்துவம்
10) அதிகார தத்துவம்
11) பிரவிருத்தி தத்துவம்
12) சகள தத்துவம் என்றும் 12 தத்துவங்களாக விரியும்.
இந்தப் பன்னிரெண்டு தத்துவங்களின் ஊடாகவே பராஶக்தி இந்தப் பிரபஞ்சத்தினை செயற்படுத்துகிறாள். இந்த பன்னிரெண்டு சக்திகளையும் செயற்படுத்தும் அதிகாரம் முருகப்பெருமானின் பன்னிரு கைகளுக்கும் பராஶக்தியால் தரப்பட்டுள்ளது.
இந்த பன்னிரெண்டு ஶக்திகளையும் செயற்படுத்தும் நிலைக்கு முருகப்பெருமானுக்கு 12 நாமங்கள் உள்ளது.
1) குகன்
2) இலயன்
3) நிட்களன்
4) சத்தன்
5) சதாகுகன்
6) போகன்
7) உத்தியுத்தன்
9) ஈசுவரன்
10) அதிகரன்
11) பிரவர்த்தன்
12) சகளன்
எனவும் அழைக்கப்படுவர்.
ஆகவே ஶக்தியின் அருளைச் செயற்படுத்த ஸுப்ரமணியரின் அருளே முதன்மை என்ற இரகசியம் இங்கு உள்ளது!
ஸ்ரீ வித்யை உபாசனை செய்பவர்களுக்குத் தெரியும் சக்தியின் அருளைப் பெற ஸர்வ தத்துவங்களையும் வசப்படுத்த மகாகணபதியின் அருள் வேண்டும் என்று!
ஶக்தியை வசப்படுத்த கணபதி என்றால் ஶக்தியைச் செயற்படுத்த ஸுப்ரமணியர் அருள் வேண்டும் என்பது வெளியில் சொல்லப்படாத இரகசியம்!
முருகனின் பன்னிரு கரங்களையும் தியானித்து ஶக்தியின் அருள் பெறுங்கள்!
Source - FB Shri Shakthi Sumanan
Comments
Post a Comment