Posts

Sakalaloka Murthy - சகலலோக குருமூர்த்தி

  முருகனுக்கு சகலலோக குருமூர்த்தி என்று ஒரு பெயர் உண்டு. இந்தப் பெயருக்கான காரணத்தை திருச்செந்தூர் புராணம் இப்படிக் கூறுகிறது. புகலுதற் கரிய மூகாம் புரியினிற் கபில யோகிக் ககமகிழ் சிறந்து கால னாணையைக் கடக்க வேண்டித் தக்கயமந் திரஞ்சொல் வாய்ந்த தந்திரப் பசும்பூ டாதித் தாகை சொலிச் சகல லோக குருப்பெயர் சூட்டிக் கொண்டான். சொல்ல முடியாத மகிமையுடைய மூகாம்புரியில் கபிலர் என்ற யோகிக்கு அகமகிழ்ந்து காலனைக் கடப்பதற்குரிய மந்திரம், தந்திரத்தைப் போதித்து சகலலோக குரு என்ற பெயரைப் பெற்றுக்கொண்டார் கபிலயோகி சாங்கிய தத்துவத்தைப் போதித்த குரு. கபில மகரிஷியின் சாங்க்ய யோகம் (Sāṁkhya Yoga) என்பது மிகப் பழமையான, தத்துவ ரீதியாக அமைந்த அறிவியல்களில் ஒன்று. இது ஞானத்தின் அறிவியல் (Jñāna Śāstra) எனப்படுகிறது. “சாங்க்ய” என்ற சொல்லுக்கு “எண்ணிக்கை” அல்லது “பிரிவு பிரித்தல்” எனப் பொருள்; அதாவது, உலகமும் சித்தமும் (consciousness) எவ்வாறு உருவாகின்றன என்பதை இருபத்திஐந்து தத்துவங்களின் (tattva) மூலம் பகுத்து விளக்கும் தத்துவம். இதன் மையக் கருத்து இரண்டு நிலைகளில் உள்ளது: புருஷன் (Puruṣa) — நித்தியமான, சாட்சியாய் ந...

The Kantha Purana Yoga Tradition - கந்த புராண யோக மரபு

Image
  யாழ்ப்பாணத்தில் கந்தபுராண மரபு என்பது இரு நூற்றாண்டு பழமையானது! கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தை படித்துப் பொருள் சொல்லி விளக்குவது! நானும் சிறுவயதில் வில்லுப்பாட்டாக கேட்ட ஞாபகம் உண்டு! இது ஒரு சமூகத்தின் ஆன்மீக முன்னேற்றத்தின் முதல் படி! புராணங்கள் அகத்தினைத் தூய்மைப் படுத்தும் உருவகக் கதைகளாக உணர்தல்! இந்தக் கதைகளைக் கேட்கும் விழிப்புள்ள ஆன்மா தனக்குள்ளே நடைபெறும் அசுர குணங்களை அறிந்து தூய்மைப்படுத்தும் நிலைக்குச் செல்ல வேண்டும். இப்படி அகவயப்படும் போது மாத்திரமே அந்த சமூகம் தீயகுணங்களை நீக்கி உயர்ந்த பண்புள்ள சமூகமாக மாறும்! இப்படி புராணக்கதைகள் அகவயப்படுத்தாத போது வெறுமனே வெளிச்சடங்குகளாகவும், பகட்டிற்கும் பெருமைக்கும் உரியவையாக மாறி குரோதம் வளர்க்கவும் பாவிக்கப்படலாம்! இதனால்தான் ஆன்மீகம், பக்திமான் என்று நாம் நம்பும் பலரும் அகத்தில் தூய்மையில்லாத பகட்டு ஆசாமிகளாக இருக்கக் காண்கிறோம்! ஆகவே கந்தபுராணத்தை ஒரு அகவழிப் பயணமான யோக புராணமாகக் காணுதல் அவசியம்! கந்தபுராணம் – யோகியின் உள் உலகக் கதை பொதுவாக நாம் கந்தபுராணம் என்று கேட்டால், முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த வ...

Pulinga Murthy - புலிங்க மூர்த்தி அல்லது சிவதேஜஸ் மூர்த்தி

  இது ஒரு அரிய சிவயோக இரகசியம், முழுமையாகப் படித்து பதில் அளிக்கவும். முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து தோன்றியவர். புராணக்கதை வருமாறு: சிவபெருமான் உமாதேவியாரை திருமணம் செய்து கைலாயத்தில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். ஆனால் சூரபத்மன் தேவர்களை, பிரம்ம, விஷ்ணுவை துன்புறுத்திக்கொண்டிருந்தான். எல்லாத் தேவர்களும் எம்மிடம் தபஸில்லை ஆகவே சிவபெருமானை வேண்டுவோம், அவர் எம்மைச் சூரபத்மனிடம் இருந்து காப்பாற்றுவார், ஆனால் முதலில் அவர் இருக்கும் நிலை என்ன என்று அறிய வாயுதேவனை அனுப்புவோம் என்று பிரம தேவர் கூற, வாயுதேவன் திருக்கையிலையிற்குள் செல்ல வாசலை அடைய அங்கு நந்தி தேவர் தடுத்து தள்ளி விட்டார். பின்னர் வாயுதேவர் நந்திக்கு தான் அனுப்பப்பட்ட காரணத்தை விபரிக்க தான் அனுமதி பெறாமல் உள்ளே புக முயன்றது தவறு என மன்னிப்பு கேட்க நந்திதேவர் கோபந்தணிந்து " உன்னை மன்னித்தோம், இங்கு நில்லாதே, சென்று விடு" என்று திருப்பி அனுப்பினார். நடந்ததை வாயுதேவன் பிரம்மனுக்கு கூற மீண்டும் அனைவரும் கைலாயத்தின் வாயிலை அடைந்து நந்தி தேவரைப் பணிந்து விண்ணப்பிக்க நந்தி தேவர் சிவபெருமானிடம் ச...

Saravanbhavar - சரவணோற்பவ மூர்த்தி

  சென்ற பதிவில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட சிவதேஜஸு அக்கினி, வாயுவினால் தாங்கப்பட்டு கங்கை வழியே ஆறுதாமரைகளில் சேர்க்கப்பட்ட புலிங்க மூர்த்தி பற்றிப்பார்த்தோம்! இப்படிச் சேர்க்கப்பட்ட ஆறு தீப்பொறிகளும்- புலிங்கங்களும் சேர்ந்து உருவான முழுவடிவத்தை இங்கு காணப்போகிறோம். இந்தப் புராணக்கதையைக் கவனமாகப் படித்து மனதில் இருத்துங்கள், இதற்குள் அரிய பல யோக இரகசியங்கள் அடங்கியிருக்கிறது. புராணக்கதை வருமாறு: சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளை கங்கையானது சுமந்து கொண்டு சரவணப்பொய்கையில் விடுத்தது. இந்த தீப்பொறிகளை பிரம்மன் ஆகாயத்திலும், விஷ்ணு பூமியிலும், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் மற்றும் ஈசானன் ஆகிய எட்டு பேரும் எண் திசைகளிலிருமிருந்து பாதுகாத்தனர். இந்த ஆறுபொறிகளும் அருவமும் உருவும் ஆதியும் அநாதியாய் , பலவாய் , ஒன்றாய், பிரம மாக விளங்கிய இந்த பஞ்சசோதி ஒன்றிணைந்து ஆறு திருமுகங்களும், பன்னிரு கைகளுமாக முருகக்கடவுளாக அவதரித்தது. இந்த மூர்த்தமே சரவணோற்பவ மூர்த்தம் எனப்பட்டது. பன்னிரு கரங்களிலும் வேல், கேடகம், கண்டாமணி, தா...

Krouncha Bhedhanar - கிரவுஞ்ச பேதனர்/ஞான ஶக்திதர மூர்த்தி

Image
  முருக உபாசனையின் நோக்கம் ஞானம். ஶிவகுகனிலும் இருந்து அபேதமாக விளங்கும் - பிரிவற்றிருக்கும் - அறிவே ஞான சக்தி எனப்படும். முருக உபாசகன் தெளிந்த அறிவை - ஞானத்தைப் பெறுவான். எப்படிப் பெறுவான் என்ற விளக்கம் வருமாறு! அறிவை மறைப்பவை மலங்கள், இவை மூன்று! சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் என்ற மூன்று அசுரர்களும் ஆன்மாவைப் பிடித்த ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்கள். இந்த மூன்று மலங்களும் எம்மில் இருப்பதால் உருவாகுவது வினைக்கூட்டமாகிய ஆகாமிய, சஞ்சித, பிரார்த்தம் எனும் மூன்று கர்மக் குவியல்களும் எம்மில் சேரும் க்ரௌஞ்ச மலை. இந்த வினைகளை அழித்து பந்தம் அறுந்தால் கிடைப்பது ஞானம்! இதை எப்படி முருக உபாசகன் பெறுகிறான்? சக்தி தர மூர்த்தியின் விளக்கத்தில் பன்னிரு கரங்களும் ஶக்தியின் வெளிப்பாடு என்று பார்த்தோம்! இந்த பன்னிரு கரங்களிலும் இருக்கும் பன்னிரு ஆயுதங்கள் இந்த வினைகளை அறுக்கும் கருவிகளாம். ஶிவ ஶக்தி ரூபமான வேலாயுதம் ஆணவ மலத்தை அறுக்கும் ஞான ஶக்தி ரூபமாம். 1) தோமரம் 2) துவசம் 3) குலிசம் 4) அங்குசம் 5) அம்பு 6) பங்கயம் 7) மணி மழு 9) தண்டு 10) வாள் 11) வில் இந்த பதினொரு ஆயுதங்களும் ஏகாதச ரு...

Shakthi Tatvam of Murugan - முருகனுக்குள் அடங்கியுள்ள ஶக்தி தத்துவம்

Image
  முருகப்பெருமானின் பன்னிரெண்டு கரங்களும் ஶக்தி தத்துவத்தின் இரகசியம் என்பதை அறிவீர்களா? பன்னிரு கரங்களையும் தியானிப்பது பரிபூரண ஶக்தி தத்துவ விழிப்பினைத் தரும்! பராஶக்தி ஞானமாக விரியும் போது 1) ஶிவ தத்துவம் 2) இலய தத்துவம் 3) நிட்கள தத்துவம் என்றும் கிரியையாக விரியும் போது 4) ஶக்தி தத்துவம் என்றும் ஞானமும் கிரியையும் இணைந்து 5) ஸதாஶிவ தத்துவம் 6) போக தத்துவம் 7) உத்தி யுத்த தத்துவம் சகள் நிட்கள தத்துவம் என்றும் இச்சையாக விரியும் போது 9) ஈசுவர தத்துவம் 10) அதிகார தத்துவம் 11) பிரவிருத்தி தத்துவம் 12) சகள தத்துவம் என்றும் 12 தத்துவங்களாக விரியும். இந்தப் பன்னிரெண்டு தத்துவங்களின் ஊடாகவே பராஶக்தி இந்தப் பிரபஞ்சத்தினை செயற்படுத்துகிறாள். இந்த பன்னிரெண்டு சக்திகளையும் செயற்படுத்தும் அதிகாரம் முருகப்பெருமானின் பன்னிரு கைகளுக்கும் பராஶக்தியால் தரப்பட்டுள்ளது. இந்த பன்னிரெண்டு ஶக்திகளையும் செயற்படுத்தும் நிலைக்கு முருகப்பெருமானுக்கு 12 நாமங்கள் உள்ளது. 1) குகன் 2) இலயன் 3) நிட்களன் 4) சத்தன் 5) சதாகுகன் 6) போகன் 7) உத்தியுத்தன் சகள நிட்களன் 9) ஈசுவரன் 10) அதிகரன் 11) பிரவர்த்தன் 12...

Sakthidharar - subramnaya swaroopam

Image
  ஒவ்வொரு முருக உபாசகனும் முதலில் தன்னை சக்தியுடையவனாக்கிக் கொள்ள இந்த ரூபத்தை உபாசிக்க வேண்டும். சக்தியில்லை என்றால் வாழ்க்கை இல்லை! வாழ்க்கையில் வெற்றி இல்லை! இந்த வடிவம் முருகன் பிரபஞ்சத்திலுள்ள எல்லாச் சக்திகளையும் ஆள்பவர் என்பதை விளக்கும்! ஆன்மாக்களின் ஆணவ மலத்தைக் கெடுத்து, நான் வேறு நீ வேறல்ல என்ற முக்தி நிலை அருளி, ஐந்தொழில்களுக்கும் காரணமாயுள்ளதும், அறிவதற்கு, அறிந்துகொள்வதற்கும் மூலமாக இருக்கும் ஞானம்/வல்லமை சக்தி எனப்படும். சக்தி என்பது என்னவென்பதை நீருக்கு குளிர்ச்சியும், தீயிற்கு வெப்பமும், மரத்திற்கு உள்ளிருக்கும் வைரவும் எப்படி அவற்றின் செயலில் பிரிவு இல்லாமல் இருக்கிறதோ அப்படி ஶிவமும், ஶக்தியும் இயங்குகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். ஒரு அரசன் இடும் ஆணை பிரதான மந்திரி, மந்திரிகள், படைத்தலைவன், சேவகன் என்று பிரிந்து இறுதியாக குடிமக்களிற்கு செல்கிறதோ அதுபோல் பராசக்தி என்று மூல சக்தி இச்சா, ஞானா, கிரியா என்று பிரிந்து பின்னர் தத்துவங்கள் மேலும் பிளவுற அனந்த சக்திகளாக விரிவுறும்! சுப்பிரமணியரை சக்திமான் ரூபத்தில் வழிபடும் போது இச்சாக்தி வெளிப்படும் ரூபத்தை இச்சிதா ...